சொட்டு நீர் பாசனம் மூலம் இயற்கை விவசாயம் செய்யும் 85 வயது விவசாயி..!

share on:
Classic

விவசாயி சேற்றில் இரங்கினால்தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும். அப்படிபட்ட விவசாயத்தை  இயற்கையான முறையில் பாசனம் செய்து வரும் 85 வயதுடைய இயற்கை விவசாயி குறித்த செய்தி தொகுப்பு...

நம் உண்ணும் உணவோடு சேர்த்து நஞ்சையும் உண்கிறோம் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. காரணம் விளையும் பொருட்களில் பூச்சுக்கொல்லி மருந்துகளும், உரங்களும் பயன்படுத்துவதால் உணவுக்கூட மறைமுகமாக நஞ்சாக மாறி வருகிறது. இதற்கு நேர்மாறாய் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த குருசாமி என்ற 85வயதுடைய விவசாயி தன்னுடைய  சொந்த தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். 

 

தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் மோட்டார் பம்பு வசதிகளுடன் கிணறு அமைத்து பாசனம் செய்து வருகிறார் குருசாமி. இவருடைய தோட்டத்தில் தென்னை, கொய்யா,  எலுமிச்சை, சப்போட்டா, வாழை, கருவேப்பிலை உள்ளிட்ட மரங்கள் பிரதானமாக பயிடப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் செலவிடப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. 
 

 

இவரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் சொட்டு நீர் பாசனம் மற்றும் இயற்கை உரங்கள் மூலம் வளர்ந்தவையே.  அதற்கு எறுவாய் கால்நடைகளின் சானம், மட்கக்கூடிய குப்பைகள் மற்றும் இலைத்தழைகளின் மூலம் உருவான இயற்கை உரத்தையே பயன்படுத்தியுள்ளார். வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் அறிவுரைப்படி பயிற்சிப்பெற்று இயற்கை விவசாயத்தை செய்து வருவதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் குருசாமி…

 

வாழ்வதற்கு தேவையான உணவுப் பொருட்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் இவரது முயற்சிக்கு வாழ்த்துக்களை பரைசாற்றுவோம்..

 

News Counter: 
100
Loading...

aravind