பில்லூர் அணையில் 88,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்..!

share on:
Classic

கனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை தமிழக – கேரள எல்லையில் அடர்ந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆற்றின் கரையோர பகுதியான உப்புப்பள்ளம் பகுதியில், 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பல இடங்களில் வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வரும் நாட்களில் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, உடை, தங்குமிடம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

News Counter: 
100
Loading...

Ragavan