close
முகப்புகாட்டுத் தீயில் சிக்கி 9-பேர் உயிரிழப்பு...மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காட்டுத் தீயில் சிக்கி 9-பேர் உயிரிழப்பு...மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காட்டுத் தீயில் சிக்கி 9-பேர் உயிரிழப்பு...மாவட்ட ஆட்சியர்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தேனி மாவட்டம் குரங்கணி வன பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றது.  இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில், 10 பேர் நலமாக உள்ளதாகவும், தீ விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் மட்டும் கவலைகிடமாக உள்ளதாகவும்  என  வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும்  காட்டுத் தீயில் சிக்கி 9-பேர் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் 5 -பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் கொழுக்குமலைப்பகுதியில் வார இறுதி நாட்களைக் கொண்டாட 37 பேர் ட்ரெக்கிங் சென்றுள்ளனர். இதில் கொழுக்குமலையிலிருந்து, போடிநாயக்கனூருக்கு மலையிலிருந்து இறங்கும் போது, ஒத்தவீடு எனும் பகுதியில் ட்ரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். 

இந்த விபத்தில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த 13 பேர் ஒரு குழுவினராகவும், சென்னையிலிருந்து வந்திருந்த 27 பேர் மற்றொரு குழுவினர் அங்கம் வகித்தனர். இதில் 27 பேர் வரை, பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

 

இதில் மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை போடியனாயக்கனுார் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே, குரங்கணி வனப்பகுதியில் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. .

16 கமாண்டோ வீரர்கள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவின் பேரில் குரங்கணி பகுதிக்கு செல்ல ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் நேற்று வந்து சேர்ந்தன. 

இரவு நேரமானதால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் மீ்ட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் ஹெலிகாப்டர் வனப்பகுதிக்குள் புறப்பட்டு சென்றது. மேலும்  காட்டுத் தீயில் சிக்கி 9-பேர் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் 5 -பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்