சொகுசுப் பேருந்தும் மினி வேனும் மோதி கோர விபத்து..9 பேர் பலி..!

share on:
Classic

கள்ளக்குறிச்சி அருகே தனியார் சொகுசுப் பேருந்தும், மினி வேனும் ஒன்றுக்கொண்டு மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 

கோவையில் இருந்து சென்னைக்குச் சென்ற தனியார் பேருந்தில் 26 பயணிகள் பயணம் செய்தனர். அதே போல் சென்னையில் இருந்து காங்கேயம் பகுதிக்கு 14 பேரை ஏற்றிக் கொண்டு மினி வேன் ஒன்று புறப்பட்டது. இரு வாகனங்களும் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புற வழிச்சாலையில் அண்ணா நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது. இதில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் மினி வேனில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 7 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind