சர்ச்சையில் சிக்கிய ‘90 எம்.எல்’ ட்ரெய்லர் : ஓவியா விளக்கம்

share on:
Classic

அண்மையில் வெளியான ‘90 எம்.எல்’ (90 ML) படத்தின் ட்ரெய்லர் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இதுகுறித்து படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஓவியா விளக்கம் அளித்துள்ளார்.

90 எம்.எல். ட்ரெய்லர் :

பிக் பாஸ் சீசன்1  மூலம் தமிழக்த்தில் பிரபலமான நடிகை ஓவியா தனக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். ஓவியா ஆர்மி என்று உருவாகும் அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் இடம்பெற்றிருந்தார் ஓவியா. தற்போது அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 90 எம்.எல். இந்த படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. சுமார் 4.5 மில்லியன் பார்வைகளை பெற்ற இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

சர்ச்சையில் சிக்கிய ட்ரெய்லர் :

ட்ரெயிலரில் வரும் காட்சிகள், டபுள் மீனிங் வசனங்கள் ஆகியவை பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைப்பதாகவும் விமர்சனங்கள் இருந்தது. இதனை தமிழ் சினிமா ஆர்வலர்கள், பெண்கள், நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்ததால் இந்த படம் குறித்து சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள் எனவும் ட்ரெயிலரை பார்த்து முழு படத்தையும் தீர்மானிக்காதீர்கள் எனவும், முழுப்படத்தை பார்க்கும் வரை காத்திருங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

படத்திற்கு ஏ சான்றிதழ் :

90எம்.எல் படத்தை அனிதா உதீப் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியிருந்தார். சிம்பு இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் என தொழில்நுட்ப ரீதியாக படக்குழு பலமாக உள்ளது. இந்த படத்திற்கு தணிக்கை ஏ சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Ramya