96 பட வெளியீட்டு பிரச்சினையில் நான் செஸ் காயினாக மாற்றப்பட்டேன் - விஜய் சேதுபதி

share on:
Classic

96 பட வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் தான் பலிக்கடாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி கூறிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

இந்த வாரம் வெளியான படங்களில் விஜய் சேதுபதியின் 96 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலால் உண்டான இந்த பிரச்சினையில் தான் பலிக்கடாக்கப்பட்டதாகவும் தமிழ் சினிமா துறையின் சிஸ்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் 96 பட வெற்றி விழாவில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

சமீபகாலமாக பட வெளியீட்டில் தொடர்ச்சியாக பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது தமிழ் சினிமா. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. திரைத்துறையிலிருக்கும் 5 விழுக்காடு பிரச்சனைகள் மட்டுமே வெளியே தெரிகிறது. மீதமுள்ள பிரச்சனைகள் யாருக்கும் தெரிவதில்லை இதற்கான தீர்வுகள் விரைவில் கிடைக்கப்பெற வேண்டும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

sasikanth