மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் 96 படத்தில் நடித்த குட்டி ஜானு!!

share on:
Classic

96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கௌரி கிஷன் தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 100 நாட்களை சிறப்பிக்கும் விதமாக, அண்மையில் அந்த படத்தின் வெற்றிக் கொண்ட்டாடம் நடைபெற்றது. விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோரின் யதார்த்தமான நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், அந்த படத்தில் பள்ளியில் படிக்கும் ராம், ஜானுவை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. ஆதித்யா பாஸ்கரும், கௌரி கிஷனும் அந்த கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருப்பார்கள்.

இவர்கள் இருவரும் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவான நிலையில், தற்போது கௌரி கிஷன் மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குனர் பிரின்ஸ் ஜாய் இயக்கும் புதிய படத்தில் சன்னி வேயினுக்கு ஜோடியாக கௌரி நடிக்க உள்ளார். ‘அனுகிரஹித்தன் அந்தோனி’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 
 

News Counter: 
100
Loading...

Ramya