96 படமானது கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக்..!!

share on:
Classic

தமிழில் த்ரிஷா, விஜய் சேதுபதி நடித்த 96 படமானது கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக்காக உருவாகி வருகிறது. 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் தான் ‘96’. இந்தப் படம் ரசிகர்களிடம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பிரேம்குமார் இயக்கியிருந்த இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார்.  

இப்போது இந்த படத்தை கன்னட மொழியில் ‘99’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. விஜய்சேதுபதி கேரக்டரில் கன்னட நடிகர் கணேஷும், த்ரிஷா கேரக்டர்ல் பாவனாவும் நடித்துள்ளனர். இயக்குனர் ப்ரீதம் குபி இயக்கிவரும் இந்த படத்திற்கு அர்ஜூன் ஜன்யா இசையமைத்துள்ளார்.  சமீபத்தில் இந்த 99 படத்தின் டிரைலர் வெளியாகி கன்னட சினிமாவில் வைரலாகி வரும் நிலையில் இந்த டிரைலரை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் என்ன இருந்தாலும் எங்க 96 படம் மாறி வருமா என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan