ஹரியானாவில் வாய்க்கால் அருகே பையில் 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு

Classic

ஹரியானாவில் கோணிப் பையில் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

ஹரியானா மாநிலம் ரொடாக் அருகேயுள்ள டிட்டாலி கிராமத்தில் உள்ள ஒரு தண்ணீர்  வாய்க்கால் அருகே, 9 வயது சிறுமியின் சடலம் கோணிப்பையில் கட்டிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, உத்தரப்பிரதேசம், பீகார், காஷ்மீர் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில், சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் , கொலைகளுக்கும் ஆளாகிவரும் நிலையில், தற்போது ஹரியானாவில் மேலும் ஒரு 9 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அம்மாநில போலீசார்,  சிறுமியின் மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News Counter: 
200

Parkavi