18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் வழக்கு - ஒரு பார்வை

Classic

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாகிறது. 

இந்த தீர்ப்பினால் அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சபாநாயகர் தனபாலின் தகுதி நீக்க உத்தரவு செல்லும் என்ற வகையில் தீர்ப்பு வந்தால், 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடப்பது உறுதி.  அதே வேளையில் உத்தரவு செல்லாது என்ற போது அதிமுக கட்சியில் மாற்றம் வரலாம் எனக்கூறப்படுகிறது. ஆனால் எப்படி தீர்ப்பு வந்தாலும் நடக்கின்ற ஆட்சி கலைய வாய்ப்பு குறைவு தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

டி.டி.வி தினகரன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் இருந்ததாக தெரியவில்லை எனக்கூறப்படுகிறது.  ஏனென்றால், அவர்கள் சபாநாயகரைச் சந்தித்து மனு கொடுக்கும் போது கூட, முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தகுதி நீக்கம் செய்யவில்லையென்றால் பணி செய்யத் தயார் என்றார் தங்கத்தமிழ்ச்செல்வன்

இதன்பின்னர் 18 எம்.எல்.ஏக்கள் மீது கொறாடா கொடுத்த புகாரின் பெயரில் சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேப்போன்று, சபாநாயகர் ஆணையிட்ட தகுதிநீக்கம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால், இடைத்தேர்தலை சந்திக்க தயாராகயிருப்பதாக  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தெரிவித்து இருக்கின்றனர். 

தகுதி நீக்க வழக்கில் வெளியாகும் தீர்ப்பு,அரசியலில் எந்தமாதிரியான மாற்றங்களை உருவாக்கும், இந்த தீர்ப்பு திருப்புமுனையாக அமையுமா என பல கோணங்களில் எதிர்பார்ப்பு குவிந்திருக்கும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வரவுள்ளது.

News Counter: 
100

Parkavi