2-வது நாளாக நடைபெறும் அ.தி.மு.க. உயர்மட்டக் குழு கூட்டம் 

Classic

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 2 வது நாளாக இன்றும் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 

முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அமைச்சர்கள்  தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, க. பாண்டியராஜன் மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100

aravindh