பிரபல ஏடிஎம் மோசடி மன்னன் சந்துருஜி கைது 

Classic

பிரபல ஏடிஎம் மோசடி மன்னன் சந்துருஜி, 80 நாட்களாக போலீஸுக்கு போக்குகாட்டிய நிலையில் சென்னையில் கைது செய்யப்பட்டுருப்பது, வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஏடிஎம் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படும் தொடர் புகார்களால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து புதுச்சேரியை சேர்ந்த 26 வயதான பொறியியல் பட்டதாரி சந்துருஜி என்பவன் நவீன ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம் கார்டுகளில் உள்ள தகவல்களை திருடி அதன் மூலம் ஏடிஎம் மற்றும் வங்கிக் கணக்குகளில் இருந்து 400 கோடி ரூபாய் அளவுக்கு நூதன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சந்துருஜியின் தம்பி உள்பட கைது செய்யப்பட்ட 15 பேரில் 8- பேர் சிறையில் உள்ளனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சந்துருஜி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். 

போலீஸ்க்கு சவால் விடும் வகையில் மும்பை, பெங்களூர், கேரளா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களுக்கு தாவியதும், 150-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்தியதாகவும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 

கோவை, அவிநாசி ஆகிய ஊர்களில் உள்ள அவனது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரி சிபிசிஐடி போலீசார், சென்னையில் இன்று சந்துருஜி கைது செய்யப்பட்டான். இதை தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும், வெளிநாடுகளில் உள்ள கூட்டாளிகளும் சிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

News Point One: 
பிரபல ஏடிஎம் மோசடி மன்னன் சந்துருஜி கைது 
News Point Two: 
கைது செய்யப்பட்டுருப்பது, வழக்கில் புதிய திருப்பம்
News Point Three: 
கூட்டாளிகளும் சிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தகவல்
News Counter: 
100
Loading...

aravindh