8 வழிச்சாலைக்கு எதிராக கருத்து கூறியதாக தமிழக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கைது

share on:
Classic

8 வழிச்சாலைக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக வசீகரன் குரல் கொடுத்துவந்தார். இந்த நிலையில், பதினாறு பேரை வெட்டுவேன் என்று அவர் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக கூறி, இன்று அதிகாலை மதுரவாயில் இல்லத்தில் வைத்து, வசீகரன் கைது செய்யப்பட்டுள்ளார். 

அண்ணா நகர் போலீசார் உதவியுடன் வசீகரனை கைது செய்த சேலம் காரியாபட்டி போலீசார், அவரை சேலம் அழைத்துச் சென்றனர். வசீகரன் மீது 153,183,189 மற்றும் 506-ல் 11 என்ற தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravindh