close
முகப்பு"லைக்ஸ்"களை குவிக்கும் நடிகர் ஜெய் பாடிய 'ஜருகண்டி' படத்தின் பாடல்...


"லைக்ஸ்"களை குவிக்கும் நடிகர் ஜெய் பாடிய 'ஜருகண்டி' படத்தின் பாடல்...

"லைக்ஸ்"களை குவிக்கும் நடிகர் ஜெய் பாடிய 'ஜருகண்டி' படத்தின் பாடல்...

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கியிருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் நிதின் சத்யா இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தில் இடம்பெறும் ‘செய்யிறத செஞ்சு முடி’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.

ஜெய் முதல் முறையாக பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது. படத்தின் அனைத்து பாடல்களையும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.