close
முகப்புஇரவோடு இரவாக  பா்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவக்கார்த்திகேயன்..!

இரவோடு இரவாக  பா்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவக்கார்த்திகேயன்..!

இரவோடு இரவாக  பா்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவக்கார்த்திகேயன்..!

நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து முன்னணி நடிகராக  தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை  பிடித்தவர் நடிகர் சிவக்கார்த்திகேயன். 

இவர் தனது அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ பெயா், பா்ஸ்ட்லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் நள்ளிரவில் வெளியிட்டுள்ளார். அதன்படி படத்திற்கு “சீமராஜா” என்று பெயாிடப்பட்டுள்ளது. பா்ஸ்ட் லுக் போஸ்டாில் சிவகாா்த்திகேயன் மிரளும் குதிரையின் மீது மஞ்சள் நிறக்கொடியுடன் அமா்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. 

இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் தினம் வேறு கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் நள்ளிரவில் “சீமராஜா” படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் சிவா. 

சமந்தா கதாநாயகியாக பொன்ராம் இயக்கத்தில் உருவாகிறது இத்திரைப்படம். இதற்கு இமான் இசையமைக்கிறார். ஏற்கனவே காமெடி நடிகர் சூரியுடன் சேர்ந்து அட்டகாசம் செய்யும் சிவா இந்த படத்திலும் அவருடன் கைகோர்க்கவுள்ளாராம்.

இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகின்றது.