இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவரும் 'விஸ்வாசம்' படக்குழு..

share on:
viswasam
Classic

‘வீரம், வேதாளம்’ படங்களின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் காம்போவில் கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் 58-வது படத்தையும் சிவாவே இயக்கி வருகிறார். ‘விஸ்வாசம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துவருகிறார்.  தற்போது, படத்தின் 3-ஆம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து 30 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த ஷெடியூலுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறதாம்.படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Anand