உலகிலேயே மிக அதிக உயரத்தில் இருந்து விழ கூடிய அற்புத நீர்வீழ்ச்சி..!

Classic

இறைவன் படைப்பில் அனைத்தும் மாயை தான். மனித பிறவி, இயற்கை, உயிரினங்கள் என ஒன்றை ஒன்று மாயை எனும் வலயத்தில் பின்னிக் கொண்டிருக்கின்றன. அவ்விதம் இயற்கை நமக்களித்த மிக முக்கிய பொக்கிஷங்களில் ஒன்று நீர்வீழ்ச்சி. நீர் வீழ்ச்சி என்றால் நயாகரா தவிர நமது எண்ணங்களுக்கு வேறெந்த வீர் வீழ்ச்சியும் புலப்படாது.

ஆனால் அதை விடப் பெரிய நீர் வீழ்ச்சி ஒன்று உள்ளது. "ஏஞ்சல் நீர் வீழ்ச்சி" 1935-ம் ஆண்டு, ஜிம்மி ஏஞ்சல் என்பவர் இதனை கண்டுபிடித்துள்ளார். தங்கத்தை தேடி மலைகளின் மேல் சுற்றித் திரிந்த போது அவர் இதனை கண்டுபிடித்துள்ளார். தென் அமெரிக்க கண்டத்திலுள்ள‌ வெனிசுலா நாட்டில் இது உள்ளது. 

காலப்போக்கில் இவரது நினைவாக இதற்கு ஏஞ்சல் நீர் வீழ்ச்சி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நீர் வீழ்ச்சி 979 மீட்டர் உயரம் உடையதாம். இந்த நீர்வீச்சியில் இருந்து ஒரு துளி தரையை அடைய 14 விநாடிகள் ஆகுமாம். இவ் நீர் வீழ்ச்சி ” Tepui (தெபுய்) ” எனும் செங்குத்து மலைச்சரிவினூடாக பாய்கிறது.

News Counter: 
100
Loading...

sankaravadivu