பாஜக மீது திரைப்பட இயக்குனர் அமீர் குற்றச்சாட்டு..

Classic

ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் நான் பேசக்கூடாது என்று சர்வாதிகாரத்தோடு உத்தரவிட்டதாகவும் தன்னை தாக்க முயற்சித்ததாகவும் பாஜக மீது திரைப்பட இயக்குனர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசாக இருப்பதாலும் அதிகாரம் அவர்கள் கையில் உள்ளதாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பதாக பாஜகவை விமர்ச்சித்துள்ளார். இது ஜனநாயக படுகொலை என்பதை தவிர வேறில்லை என்றும் ஜனநாயகத்தை காக்கின்ற ஊடகத்தின் மீதும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சினையில் தனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருக்கின்ற அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அமீர் கூறியுள்ளார்.

News Counter: 
100

aravindh