close
முகப்பு அமெரிக்காவில் மீண்டும் காட்டுத்தீ..!

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத்தீ..!

June 13, 2018 66Views
 அமெரிக்காவில் மீண்டும் காட்டுத்தீ..!

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 2,000ற்கும் மேற்பட்ட வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 15 சதவிகிதம் வனப்பகுதி தீயில் எரிந்து கருகியுள்ள நிலையில், காட்டுத்தீ தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் முன்னேறி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் மாகாண அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரிஸோனா மற்றும் நியூ மெக்ஸிகோ தேசிய பூங்காக்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. காட்டுத்தீ ஏற்படுவதற்கான மூலக்காரணம் குறித்து  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவு, கொலராடோ வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயாக இது பதிவாகியுள்ளது.