பிசிசிஐ-ன் உயரிய விருதை மனைவி அனுஷ்காவிற்கு சமர்பித்தார் விராட் கோலி

Classic

பிசிசிஐயால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பாலி உம்ரிகர் விருது இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. 

2016-17, 2017-18ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான பிசிசிஐ சார்பாக விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சர்வதேச அரங்கில் சிறந்த வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிசிசிஐ சார்பாக வழங்கப்படும் இந்த விருதை விராட் கோலி, மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேரில் சென்று பெற்று மகிழ்ந்தார்.

அதேபோல், மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனைகளாக ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. இரு வீராங்கனைகளும் முதல் முறையாக சிறந்த வீராங்கனைகளுக்கான விருதை பெற்றனர். தவிர, பரிசுத்தொகையை ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சமாகவும் பிசிசிஐ உயர்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விராட் மனைவி அனுஷ்கா சர்மாவுடனும், தினேஷ் கார்த்திக் மனைவி தீபிகா பல்லிகலுடனும் கலந்து கொண்டனர்.

News Counter: 
150

Parkavi