நீங்களும் பாடகர் ஆகலாம் - வாய்ப்பு கொடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்.

share on:
arr
Classic

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய சினிமா ரசிகர்களுக்கே பிடித்தமான இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதனால் முக்கிய படங்களை இயக்கும் இயக்குநர்கள் ஒவ்வொருவரின் முதல் தேர்வும் இவர் தான்.

இவரின் கைவசம் தற்போது கோலிவுட்டில் மட்டும் ரஜினியின் ‘2.0’, விஜய்யின் ‘சர்கார்’, மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்’, சிவகார்த்திகேயனின் சைன்ஸ்-ஃபிக்ஷன் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் “உங்களுக்கு இசையில் பேரார்வம் இருக்கிறதா? இருந்தால், நீங்கள் ஸ்டேஜ் ஏறுவதற்கான தருணம் இது. நாங்கள் ஒரு நல்ல நட்சத்திர பாடகரை தேடிக்கொண்டிருக்கிறோம். அது நீங்கள் தான் எனில், உங்களது முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் --> http://bit.ly/arrivedwitharr தெரிவிக்கவும்” என்று கூறியுள்ளார். 

News Counter: 
100
Loading...

Anand