அப்பலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை..!

Classic

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு, அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்பலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

கடந்த முறை நடைபெற்ற விசாரணையில், சில மருத்துவர்கள் ஆஜராகவில்லை எனவும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியது. 

இன்னும் 6 பேர் ஆஜராக வேண்டும் எனவும், அவர்கள் ஆஜராகவில்லை என்றால், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசாரணை ஆணையம் எச்சரித்துள்ளது.

News Counter: 
100

aravindh