ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தி கொலை

Classic

திருச்சியில் ஆட்டோ டிரைவரை கொலை செய்து சாக்கில் கட்டி அவரது ஆட்டோவில் வைத்து மிளகாய் பொடி தூவிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி,  உறையூர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஆனால் அந்த தொழிலில் நஷ்டம் ஏற்படவே, கடந்த சில மாதங்களாக ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் உறையூர் ராமலிங்க நகரில் மர்ப நபர்கள் இவரை  கத்தியால் குத்தி கொலை செய்து சாக்கில் கட்டி அவரது ஆட்டோவில் வைத்து மிளகாய் பொடி தூவி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, துரைராஜை கொலை செய்த மர்ம நபர்களை தெடி வருகின்றனர்.

News Counter: 
100

sankaravadivu