பக்கோடாவிற்கு போட்டியாக  அல்வா கடை திறந்த பாஜக..!  | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புபக்கோடாவிற்கு போட்டியாக  அல்வா கடை திறந்த பாஜக..! 

பக்கோடாவிற்கு போட்டியாக  அல்வா கடை திறந்த பாஜக..! 

பக்கோடாவிற்கு போட்டியாக  அல்வா கடை திறந்த பாஜக..! 

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி பக்கோடா விற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் அல்வா கடை திறந்து விற்பனை செய்துள்ளனர்.

பிரதமர் மோடியின் பக்கோடா குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் முதல்வர் நாராயணசாமி பகோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் நேரு சாலையில் "நாராயணசாமி அல்வா கடை" என பெயரிட்டு அல்வா கடை திறந்து அல்வா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநில பாஜக-தலைவர் சாமிநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் "புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு வந்து எந்த திட்டமும் நிறைவேற்றாமல் மக்களுக்கு அல்வாதான் கொடுத்தார்" எனக்கூறி நூதன முறையில் அல்வா விற்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.