ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: வெற்றி பெற்ற வங்கதேச அணிக்கு 2 கோடி ரூபாய் பரிசளித்த அரசு ...

Classic

ஆசிய கோப்பையை முதல்முறையாக கைப்பற்றிய வங்கதேச அணிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. 

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் 6 முறை சாம்பியனான பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

ஆசிய கோப்பை தொடரை வங்கதேச அணி முதல் முறையாக வென்றதால், பல்வேறு தரப்பினரும் வங்கதேச அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோப்பையை வென்ற அணிக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன், ”இந்த வெற்றியை கொண்டாட வார்த்தை இல்லை, வீராங்கனைகளை ஊக்குவிக்க இந்த தொகை வழங்கப்படும், இனி வரும் காலங்களில் மகளிர் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

News Counter: 
100

Parkavi