PhotoGrapher-களுக்காகவே நச்சுனு சில Best Back Camera Smart Phones..!

Classic

நம்மை சுற்றி நடக்கும் அனைத்தையும் சிறு கீறுகள்கூட இல்லாமல் திரும்ப பார்க்கவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி புகைப்படம். ஆம், நமக்கு காலம் கடக்க கடக்க வயது முதிர்வு ஏற்படலாம் ஆனால் நம் புகைப்படங்களுக்கு முதிர்வு என்பது என்றுமே இல்லை.

20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம்.

தற்போது எங்கு எதை பார்த்தாலும் புகைப்படம் எடுக்கும் புகைப்பட விரும்பிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறார்கள். அவ்வாறு புகைப்படம் எடுக்க அவர்கள் அதற்கு செலவிடும் பணமும், காலமும் எண்ணற்றவை.

இன்றைய நாட்களில் புகைப்படம் எடுக்கு முதலில் உபயோகப்படுவது செல்ஃபோன். ஆம், பெரிதும் செல்ஃபோன்களே ஆகும். அவசர காலங்களில் அழைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட காலங்கள் மறைந்து புகைப்படம் எடுப்பதற்காகவே புதிய கேமரா தொழில்நுட்பம் கொண்ட புதிய வகையிலான ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து வருகின்றன முன்னணி நிறுவனங்கள்.

அந்த வகையில் தற்போது பெரிதும் பேசப்படக்கூடிய சில ஸ்மார்ட்ஃபோன்களை பற்றி இங்கு பார்ப்போம்.

முதல் வரிசையில் இருப்பது கூகுல் பிக்ஸல் 2 XL ஸ்மார்ட் ஃபோன்.
 

இந்த கூகுல் பிக்ஸல் 2 XL ஸ்மார்ட் ஃபோன் புகைப்பட பிரியர்களுக்கு ஒரு வரப்பிராசாதம் என்றே சொல்லலாம். ஸ்மார்ட் ஃபோன் என்றாலே முதலில் மனதிற்கு வருவது ஐ போன், அந்த ஐ ஃபோனுக்கு கேமரா தொழில்நுட்பத்தில் சவாலாக இருக்கிறது இந்த ஸ்மார்ட்ஃபோன்.

இது ஆண்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் விரும்பிகளுக்கு ஏற்றார்போல் கச்சிதமான முறையில் சிறந்த கேமர வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

அப்படி இதில் என்ன சிறப்பம்சங்கள்.

இதில் 4 GB மற்றும் 64 GB வரை ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் டிஸ்ப்ளே 6inches , 1080 x 2240px resolution என்ற அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

2.4 GHz,Octa என்ற பிராசஸர் வசதி, ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கொடுக்கப்பட்டுள்ள பின்புற கேமரா 12.2 MP மற்றும் முன்புற கேமரா 8 MP என்ற அளவிலும் உள்ளதால் இதன் மூலம் எடுக்கப்படும் ஃபோட்டோக்கள் அச்சு அசராமல் செதுக்கியபடி கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

 

மேலும் இதில் 3520 mAH சக்தி கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

அடுத்து ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ்

 

கூகுல் பிக்ஸல் 2 XL அடுத்த படி இருப்பது ஆப்பிள் ஐஃபோன் X. இவர்களின் தொழில்நுட்பத்தில் புதிய புதிய வசதி வருவது அனைவருக்குமே ஆச்சரியம். ஐஃபோன் 8- கொடுக்கப்பட்ட மாதிரியே இதில் பின்புறம் இரு கேமரா வசதி கொடுப்பட்டுள்ளது. 

 

இந்த ஐஃபோன் X-ஐ புகைப்பட வல்லுநர்களும் பயன்படுத்தி புகைப்படங்கள் எடுக்கின்றனர். பல விழாக்களில் புகைப்பட கலைஞர்கள் இதனை பயன்படுத்தி சிக்கனமான முறையில் சிறந்த  ஃபோட்டோக்களை வழங்குவதும் நடப்பில் நடந்து வருகின்றது.

அப்படி என்ன இருக்கிறது இந்த ஆப்பிள் ஐ ஃபோன் எக்ஸ்-ல..?

இதில் 3 GB ரேம் | 64 GB ஸ்டோரேஜ் உள்ளது
இதன் டிஸ்ப்ளே  5.8 (1125 x 2436) என்ற resolution-ல் உருவாக்கப்பட்டுள்ளது.

 

2.39 GHz,Hexa என்ற பிராசஸர் வசதியுடன், ஐ ஓ எஸ் இயங்குதளம் மூலம் இயங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பின்புறம் 12 + 12 MP  என்ற அளவில் இரு கேமராவும் முன்புறம் கேமரா 7 MP என்ற அளவிலும் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இனி ஃபோட்டோவோ அல்லது செல்ஃபியோ எதுவா இருந்தாலும் ஐஃபோன் எக்ஸ் தான்.

 

மேலும் இதில் 2716 mAH சக்தி கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

 

3-வது இடத்தில்ஹவாய் பி20 ப்ரோ

ஹவாய் பி20 ப்ரோ மூன்றாம் இடத்தில் உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் பின்புறத்தில் 3 கேமராக்கள் வசதி உள்ளது.  இது ஸ்மார்ட்ஃபோன்களில் இது ஒரு மயில்கல்லாக அமைந்துள்ளது. ஸ்மார்ட்ஃபோன் புகைப்படப்பிரியர்களுக்கு இது மேலும் ஒரு கூடுதல் குதுகலத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

இந்த வசதியானது லைகா உடனான கூட்டணியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை கொஞ்சம் விரிவாக காண்போம்...!

இதை சற்று சிறப்பாக்க இதில் 6 GB ரேம் வசதியுடன்,  128 GB ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது.

 

இதன் டிஸ்ப்ளே 6.1 inches (1080 x2240 ) resolution என்ற அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

Octa என்ற பிராசஸர் வசதி, ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அதிரடி சிறப்பம்சமாக கொடுக்கப்பட்டுள்ள பின்புற கேமராக்கள் 40+20+8  MP என்ற வசதியுடன் உள்ளதால் தொழில்நுட்ப கேமாராக்களுக்கே இது போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.  
 

24 MP கொண்ட முன்பக்க கேமராவில் எடுக்கும் செல்ஃபிகள் பார்ப்பவர்களை வியக்கவைக்கும் அளவிற்கு பிரமிக்கவைக்கக்கூடியது.

மேலும் இது 4000mAH அளவு கொண்ட பேட்டரி வசதியும் உள்ளடங்கும் . 

இவ்வாறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே இருக்கும் இக்காலத்தில் அனைத்தையும் கைப்பைக்குள் அடங்கும் அளவிற்கு புதிய வசதிகளின் எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

News Counter: 
100

aravind