இனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது..வாகன ஓட்டிகளே உஷார்ர்ர்......... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஇனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது..வாகன ஓட்டிகளே உஷார்ர்ர்.........

இனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது..வாகன ஓட்டிகளே உஷார்ர்ர்.........

January 25, 2018 4395Views
இனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது..வாகன ஓட்டிகளே உஷார்ர்ர்.........

வாகன சோதனை நடத்தி தினமும் ரூ. 10 ஆயிரம் வசூலிக்க வேண்டும் என காவலர்களுக்கு அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக காவலர்கள் ஆவணம் இல்லாதவர்கள், சரியான சாலையில் வாகனம் இயக்காதவர்கள், வாகன அடையாள அட்டை இல்லாதவர்கள் ,ஹெல்மெட் அணியாதவர்கள் ஆகியோர்களிடம் அபராதம் வசூலித்து, சிறு சிறு வழக்குகள் பதிவு செய்வது வழக்கம்.

ஆனால் தற்போது தமிழக அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது, அதன்படி ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஒரு நாளிற்கு ரூ.10 ஆயிரம் வசூல் செய்யவேண்டும்.  இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை எற்படுத்தியுள்ளது. ஒருநாளில் தங்களுக்குள்ளான  எல்லையில்  எப்படி இவ்வளவு தொகையை வசூல் செய்ய முடியும்  என்பதே காவலர்களின் வருத்தம்.

நேற்று முதல் காவலர்கள் தீவிர வாகன வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர். நேற்று விடிய விடிய  தமிழகம் முழுவதும் நடந்த பல்வேறு வாகன வேட்டையில் காவலர்கள் திக்கி, திணறி தங்களுக்கான இலக்கை அடைந்துவிட்டனர். இந்த உத்தரவு காவலர்காளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தினாலும், உயர் அதிகாரிகளின் உத்தரவை ஏற்று இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ரூ.10 ஆயிரம் வீதம் வசூலிப்பது என்றால், ஒரு காவல் நிலையத்தில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். எனவே 20 சப்-இஸ்பெக்டர்கள் வீதம் ஒரு நாளிற்கு சுமார் 3 லட்சம் வரை வசூலாகிறது. இதுவே தமிழகம் முழுவதும் வசூல் என்றால் எத்தனை கோடி என்றே கணக்கிடமுடியவில்லை. இது இல்லாமல் போக்குவரத்து காவலர் வேறு தனியே தங்களின் வசூலை மேற்கொள்கின்றனர்.

இந்த மொத்த பணமும், முதலில் சப்-இஸ்பெக்டர் கருவூலத்திற்கு சென்று அங்கிருந்து நேரடியாக தலைமை செயலகத்திற்கு போய் சேருகிறது. இறுதியில் இந்த பணம் யாரிடம் சேருகிறது என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம்.