உலகக்கோப்பை பிரேசில் அணிக்கே...ரொனால்டோ நம்பிக்கை..

Classic

ஃபிஃபா உலகக்கோப்பையை இந்த முறை பிரேசில் அணி வெல்லும் என அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானுமான ரொனால்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ரஷ்யா முழுவதும் பரவியுள்ள உலகக்கோப்பை காய்ச்சல் நாளை முதல் அரங்கேறவுள்ளது. இதற்காக ரஷ்யா சுமார் எண்பதாயிரம் கோடிக்கு மேல் செலவிட்டு மிக பிரம்மாண்டமாக இந்த உலகக்கோப்பையை அரங்கேற்றுகிறது. இதில் போட்டி நடைபெறும் இடங்களில் ஒன்றான மாஸ்கோ நகருக்கு போட்டியை காண பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ வந்தடைந்தார். அப்போது பேசிய ரொனால்டோ, உலகக்கோப்பையை இந்த முறை பிரேசில் அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

நட்சத்திர வீரர் நெய்மர் அணிக்கு மிகவும் பலமாக இருப்பதாக கூறிய ரொனால்டோ, அவரது ஆட்டத்தை பொறுத்தே பிரேசில் அணியின் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். 2002 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை பிரேசில் அணி வெல்ல ரொனால்டோ முக்கிய காரணமாக இருந்தார். அதன்பிறகு 16ஆண்டுகள் ஆகியுள்ள இந்த வேளையில் பிரேசில் மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் எனவும் ரொனால்டோ தெரிவித்தார்.

 

News Counter: 
100

aravindh