கட்டிடத் தொழிலாளர்கள் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம்

share on:
Classic

புதுச்சேரியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் தீபாவளி பண்டிகைக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட கட்டிடக்கலை தொழிலாளர்கள் சட்டசபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசின் கீழ் உள்ள கட்டிடக்கலை தொழிலாளர் நல வாரியத்தில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கட்டிடக்கலை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும் உதவித்தொகையினை ரூபாய் 2 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும் கூப்பனுக்கு பதிலாக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பணமாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட கட்டிடக்கலை தொழிலாளர்கள் சட்டசபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu