வைகோ மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு...

Classic

ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில் வைகோ உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக அண்மையில் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு  சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை பார்த்து, ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீஸ்ராம் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த மதிமுக தொண்டர்கள், வழக்கறிஞர் ஜெகதீஸ்ராமை கடுமையாக தாக்கினர்.   இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு வந்த போலீசார்  வழக்கறிஞரை மீட்டு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக  வழக்கறிஞர் ஜெகதீஸ்ராம்  தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் மற்றும்  மாவட்ட  காவல்  கண்காணிப்பாளர் அலுவலகத்தில்   புகார் அளித்திருந்தார்.  ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, குற்றவியல்  நடுவர்  நீதிமன்றத்தில், தன் மீது தாக்குதல் நடத்திய வைகோ உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜெகதீஸ்  ராம்   வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக வழக்கறிஞர் செங்குட்டுவன்  உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

 

News Point One: 
வைகோ மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு...
News Point Two: 
ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு
News Point Three: 
வழக்கறிஞர் ஜெகதீஸ்  ராம்   வழக்கு தொடர்ந்தார்
News Counter: 
100
Loading...

aravindh