சிஆர்பிஎஃப் தாக்குதல் : ஒரு ராணுவ வீரர் வீர மரணம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புசிஆர்பிஎஃப் தாக்குதல் : ஒரு ராணுவ வீரர் வீர மரணம்

சிஆர்பிஎஃப் தாக்குதல் : ஒரு ராணுவ வீரர் வீர மரணம்

February 12, 2018 124Views
சிஆர்பிஎஃப் தாக்குதல் : ஒரு ராணுவ வீரர் வீர மரணம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினரின் முகாம் மீது  நடத்த தாக்குதலில் ராணுவ வீரர் மரணம்.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ஸ்ரீநகர் அருகே உள்ள கரண் நகர் சி.ஆர்.பி.எப். முகாம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயன்றதாக கூறப்படுகிறது. 

சி.ஆர்.பி.எஃப் முகாமை நோக்கி, துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் சென்ற இருவர் மீது காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து, தீவிரவாதிகள் தப்பி சென்றதாகவும், முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெறுவதோடு, முகாமிற்குள்ளும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, சஞ்சுவான் ராணுவ முகாமின் குடியிருப்பு பகுதி வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் உயிரிழந்தனர். 
மேலும் இந்த தாக்குதலில் படுகாயமைந்த ஒரு ராணுவ வீரர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.