காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற ஹரியானா மாநில வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு

Classic

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பாக ஹரியானா மாநிலத்திலிருந்து பதக்கம் வென்றவர்களுக்கு அம்மாநில அரசு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் இந்தியா சார்பாக 217வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தது. 

இதனையடுத்து, காமன்வெல்த் தொடரில் இந்தியா சார்பாக ஹரியானாவிலிருந்து 38 வீரர், வீராங்கனைகள் பல்வேறு வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர். குறிப்பாக, துப்பாக்கிச்சுடுதலில் 15வயதே ஆன அனிஷ் பன்வாலா, மற்றும் 16வயதே ஆன மானு பாக்கர் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர். 

ஒட்டுமொத்தமாக ஹரியானா வீரர், வீராங்கனைகள் 9தங்கம், 6 வெள்ளி, 7வெண்கலம் வென்றனர். இந்நிலையில், காமன்வெல்த் தொடரில் பதக்கம் வென்றவர்களுக்கு ஹரியானா மாநில அரசு சார்பாக அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். அதன்படி, தங்கம் வென்றவர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாயும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு 75 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு 50 லட்சமும் பரிசுத்தொகையை அறிவித்தது. 

இந்த வெற்றி மிகப்பெரிய வெற்றி எனவும், நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வீரர், வீராங்கனைகள் பெருமை சேர்த்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் அனில் தெரிவித்தார். 

மேலும், தங்கம் வென்றவர்களுக்கு ஏ பிரிவு அரசு பதவியும், வெள்ளி வென்றவர்களுக்கு பி பிரிவு பதவியும், வெண்கலம் வென்றவர்களுக்கு சி பிரிவு பதவியும் ஹரியானா மாநிலம் சார்பாக வழங்கப்படும் எனவும் அனில் தெரிவித்தார்.

News Point One: 
பதக்க வென்றவர்களுக்கு அரசு பதவி அறிவிப்பு
News Point Two: 
ஹரியானாவிலிருந்து 38 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்
News Point Three: 
9தங்கம், 6 வெள்ளி, 7வெண்கலம் வென்றனர்
News Counter: 
200

Parkavi