பயனர்களின் தகவல்கள் வெளியானது குறித்து பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ்..

Classic

பயன்பாட்டாளர்களின் சுய தகவல்கள் வெளியானது குறித்து முகநூல் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

உலகில் லட்டசக்கணக்கானோர் முகநூலில் கணக்கு வைத்திருக்கும் நிலையில், 14 மில்லியன் பயன்பாட்டாளர்களின் சுய தகவல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயன்பாட்டாளர்கள் முகநூல் நிறுவனம் மீது கடும் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில், பயன்பாட்டாளர்களின் சுய தகவல்கள் வெளியானது குறித்து முகநூல் நிறுவனம் உரிய பதிலளிக்க வேண்டுமென,அந்நிறுவனத்திற்கு மத்திய சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக இதுகுறித்து பதிலளித்த முகநூல் நிறுவனம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தகவல் வெளியே கசிந்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

News Point One: 
பயனர்களின் தகவல்கள் வெளியானது குறித்து பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ்..
News Point Two: 
14 மில்லியன் பயன்பாட்டாளர்களின் சுய தகவல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை
News Point Three: 
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தகவல் வெளியே கசிந்ததாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருந்தது
News Counter: 
100

aravindh