சிலை கடத்தல் வழக்கு...தமிழக அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி..!

share on:
Classic

மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பாமல் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது   சிலை கடத்தல் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து  நீதிபதிகள், எந்த ஆவணங்களையும் மத்திய அரசிற்கு அனுப்பாமல் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததற்கு அதிருப்தி தெரிவித்தனர். 

மேலும், அரசுக்கு அவசியமென்றால் 1 மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாகவும், இல்லையென்றால் உத்தரவு பிறப்பிக்க 3 மாதங்கள் ஆவதாகவும் நீதிபதிகள் சாடினர்.

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 25க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind