மகளுக்கு தொந்தரவு கொடுத்த கணவரை கட்டியால் அடித்த கொன்ற மனைவி ..

share on:
koyambedu husband murder
Video

சென்னையில் கணவரைக் கொன்ற மனைவியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்பேடு அருகே சுந்தர ராஜன் - வள்ளி தம்பதியினர் வசித்து வந்தனர். கார்பெண்டராக வேலை பார்த்து வந்த சுந்தர ராஜன், ஒழுங்காக வேலைக்கு செல்லாமல், போதைக்கு அடிமையாகி வீட்டிலேயே இருந்துள்ளார்.

அப்போது, வீட்டில் இருந்த தனது மகளை தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், அவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். நேற்றும் அதேபோல் நடந்துகொண்டதால் ஆத்திரமடைந்த வள்ளி, கட்டையால் அடித்தே கணவர் சுந்தராஜனை கொன்றுள்ளார்.

பின்னர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வள்ளி கூறியிருந்தநிலையில், பிரேத பரிசோதனையில் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வள்ளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Anand