close
முகப்புஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்: இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்: இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்: இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் அரையிறுதி போட்டியின் 2-வது ஆட்டத்தில்  கோவா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது. 

4-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் 10 அணிகள் விளையாடின.  இதில்,  சென்னை, கோவா, பெங்களூரு மற்றும் புனே அணிகள்  அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. முதலாவது அரையிறுதி போட்டியில், பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்நிலையில், சென்னை, கோவா இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில், கோவா அணியை வீழ்த்தி சென்னை அணி  இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரு 17 -ம் தேதி , பெங்களூருவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி - சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன.