தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகை அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி

Classic

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரிசுத்தொகையை அறிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் தமிழக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தின் சரத் கமல், ஞானசேகரன் இணைக்கு தலா 50 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக வீரர்கள் பதக்கம் வென்றது மகிழ்ச்சியான தருணம் என்றும், வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தீபிகா பல்லிகலுக்கு 60 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் அறிவித்துள்ளார்.
 

News Counter: 
200

sankaravadivu