மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் திடீர் சந்திப்பு

share on:
Classic

18 எம்.எல்.ஏ -க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 18 எம்எல்ஏ-க்கள் தீர்ப்பு வெளியாகும்போது ஏற்படும் சாதகம் மற்றும் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக, ஆட்சியை தக்கவைக்க செய்ய வேண்டியது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

sankaravadivu