close
முகப்புஉலக கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த முதலமைச்சர்

உலக கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த முதலமைச்சர்

March 12, 2018 201Views
உலக கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த முதலமைச்சர்

உலக கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை முதலமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மார்ச் 11 -ம் தேதி முதல் 17 -ம் தேதி வரை உலக கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம்  கடைபிடிக்கப்படுகிறது. குளுக்கோமா நோயினால் உலகமெங்கும் 6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், குளுக்கோமா நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம்  மற்றும் புதுச்சேரி கண் மருத்துவர்கள் சங்கம் சார்பில்  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

கடற்கரை சாலையில் இருந்து தொடங்கிய பேரணியை,  முதலமைச்சர் நாராயணசாமி பேரடியை துவக்கி வைத்து சிறிது தூரம் நடந்து சென்றார். இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு குளுக்கோமா நோயினால் ஏற்படும் பாதிப்பு குறித்து  பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.