ஒப்பந்த துப்பரவு பணியாளர்கள் திடீர் காத்திருப்பு போராட்டம்

share on:
Classic

ஸ்ரீவைகுண்டத்தில் ஒப்பந்த துப்பரவு பணியாளர்கள் திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் வேலைசெய்யும் 25 ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு 200 ரூபாய் தினக்கூலியாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கூடுதலாக கூலிதரக்கோரி, ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சி அலுவலகத்தின் முன்னிலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தாமிரபரணி மகாபுஷ்கர நிகழ்ச்சிக்காக துப்புரவு பணி நடைபெற்று வரும் நிலையில்,செயல் அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

 

News Counter: 
100
Loading...

aravind