கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது காமன்வெல்த் தொடர் !

Classic

இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் காமன்வெல்த் தொடரானது 21-வது முறையாக நடப்பாண்டு கடந்த 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது. 

71 நாடுகளிலிருந்து பல்வேறு வகையான விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பாக 217 வீரர், வீராங்கனைகள் அடங்கிய குழு தொடரில் பங்கேற்றது. இதன் இறுதி நாளில் மகளிருக்கான ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவு போட்டி நடைபெற்றது.

 இதில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் இணை, நியூசிலாந்தின் கிங், லேண்டர்ஸ் இணையுடன் தங்கப்பதக்கத்திற்கு மோதியது. இதில் 9-11, 8-11 என்ற நேர் செட்டில் இந்திய இணை தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. 

அடுத்து ஆடவருக்கான இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து இணையை வீழ்த்தி ஆஸ்திரேலியா சம்பியன் பட்டம் வென்றது. 

ஆடவர் இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சட்விக் சாய்ராஜ், சிராஜ் ஷெட்டி இணை, இங்கிலாந்து இணையுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த போட்டியில் முதல் செட்டை 13-21 என இந்திய இணை தவறவிட்டது. 2-வது செட்டிலும் போராடிய இந்திய இணை அதனையும் 16க்கு21 என்ற கணக்கில் தவறவிட்டு வெள்ளிப்பதக்கம் வென்றது. 

கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இரு இங்கிலாந்து இணைகள் மோதியதில் 2க்கு1 என்ற கணக்கில் கேப்ரில்லே, க்றிஸ் இணை தங்கம் வென்றது. 

அடுத்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் நம்பர் ஒன் இடத்திலுள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த், மலேசிய வீரர் லீ சாங் வெய் உடன் பலப்பரீட்சை நடத்தினார். 

இந்த போட்டியில் முதல் செட்டை 21-19 என ஸ்ரீகாந்த் வெல்ல, 2-வது செட்டை 21-14 என லீ சாங் வெய் வென்றார். 3-வது செட்டை 14-21 என தவறவிட்ட ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார்.  

இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் சிங்கப்பூர் இணை, இங்கிலாந்து இணையுடன் மோதியது. இதில் 3-0 என்ற நேர் செட்டில் சிங்கப்பூர் இணை வெற்றி பெற்று தங்கம் வென்றது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீரர் நிங் (Ning Gao), நைஜீரிய வீரர் குவாட்ரி (Quadri Aruna) உடன் மோதினார். 

விறுவிறுப்பான இந்த போட்டியில் முதல் 2 செட்களை தவறவிட்ட சிங்கப்பூர் வீரர் அடுத்த 4 செட்களை கைப்பற்றி தங்கப்பதக்கத்தை வென்றார்.

News Point One: 
கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது காமன்வெல்த் தொடர்
News Point Two: 
5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது.
News Point Three: 
இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீரர் தங்கப்பதக்கம்
News Counter: 
100

sankaravadivu