close
முகப்பு நல்ல எதிர்கட்சியாக செயல்படுவதில் காங்கிரஸ் தோல்வி -  பிரதமர்மோடி விமர்சனம்


நல்ல எதிர்கட்சியாக செயல்படுவதில் காங்கிரஸ் தோல்வி -  பிரதமர்மோடி விமர்சனம்

 நல்ல எதிர்கட்சியாக செயல்படுவதில் காங்கிரஸ் தோல்வி -  பிரதமர்மோடி விமர்சனம்

நல்ல எதிர்கட்சியாக செயல்படுவதில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் 5 தொகுதிகளைச் சேர்ந்த பாஜக செயல்பாட்டாளர்களிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின் உண்மைத்தன்மையை காங்கிரஸ் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் கட்சிகள்  வெளிப்படுத்தி வருவதாக கூறினார். 

முந்தைய மத்திய அரசின் தோல்வியை மக்கள் நன்கு அறிந்ததால் தான் காங்கிரஸ் முன்கூட்டியே ஆட்சியை இழந்ததாகவும், முடிவெடுப்பதில் தோல்வி அடைந்த காங்கிரஸ் ஊழல் நிறைந்த கட்சியாக திகழ்ந்ததாகவும் கடுமையாக குற்றம்சாட்டினார். 

மேலும், சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவதிலும் காங்கிரஸ் இப்போது தோல்வியைத் தழுவியிருப்பதாகவும் மோடி சாடினார்