தொடர் கன மழையால் காவிரியை திறந்தது கர்நாடகம் ..!

Classic

கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால்  தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.  

கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி அணைகள் வேகமாக நிரம்புகின்றன. கடந்த மே 30-ம் தேதி கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் பருவமழை தொடங்கியது. 

இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது கர்நாடக அணைகளின் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 50,000 கன அடியை தாண்டியிருக்க வாய்ப்புள்ளது. அணைகளின் நீர் இருப்பும் 25 டி.எம்.சியை தாண்டியிருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சியும், ஜூலையில் 34 டி.எம்.சியும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 

இதனால் கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகள், வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. திறந்துவிடப்படும் தண்ணீர் இரு நாட்களில் தமிழகம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100

sankaravadivu