ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கைது

Classic

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியை நள்ளிரவில் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் கிதர் பிஸ்மி. இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார்.  இவர் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கிதர் பிஸ்மியின் வீட்டிற்கு நள்ளிரவில் வந்த சிப்காட் போலீசார், வீட்டின் கதவை உடைத்துள்ளனர். இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட்  ஆலைக்கு  எதிரான  போராட்டத்தில்   ஈடுபட்டவர்களை போலீசார் தொடர்ந்து கைது  செய்யும் சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100

Parkavi