துப்பாக்கிச் சூடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Classic

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டக் காட்சிகள் மற்றும் அறிக்கையை வரும் 18-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி குமரெட்டியார்புரம் உள்ளிட்ட பலப் பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாளான மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற போராட்டம் கலவரமாக வெடித்ததில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில், 13 பேர் கொல்லப்பட்டனர்.  100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட 15-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த உயர்  நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், சி.டி. செல்வம், எம்.ஏ. பஷீர் அகமது ஆகியோர் அமர்வு, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. 

துப்பாக்கிச் சூடு நடந்தபோது மாவட்ட ஆட்சியர் எங்கிருந்தார், எந்த ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன என்று வினவிய நீதிபதிகள், இது தொடர்பாகவும், 99 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தின் காட்சிகளை வரும் 18-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், 99 நாள் போராட்டம் குறித்து சிஐடி போலீசாரின் தினசரி தகவலையும் அறிக்கையாக சமர்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

News Point One: 
துப்பாக்கிச் சூடு சம்பவத்தன்று, மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றார்...நீதிபதிகள் கேள்வி...
News Point Two: 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டம்
News Point Three: 
காட்சிகள் மற்றும் அறிக்கையை வரும் 18-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு
News Counter: 
100
Loading...

aravindh