close
முகப்புஆற்று வெள்ளத்தில் சிக்கிய 200 மாடுகளை மீட்கும் பணி தீவிரம்

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 200 மாடுகளை மீட்கும் பணி தீவிரம்

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 200 மாடுகளை மீட்கும் பணி தீவிரம்

தாமிரபரணி ஆற்றுக்குள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுகளை பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். 

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் தண்ணீர் வரத்து திடீரென்று அதிகரித்தது. இதில், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கலியாவூரில், தாமிரபரணி ஆற்றுக்குள் சென்றுகொண்டிருந்த சுமார்  200 மாடுகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. 

இதில், 100க்கும் மேற்பட்ட மாடுகளை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். மேலும், ஆற்றுக்குள் முளைத்திருக்கும் அமலை செடிகளில் சிக்கிக்கொண்ட 100க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  

தற்போது மீட்பு பணி அதிகாரிகளுடன் கால்நடை மருத்துவ குழுவும், வருவாய் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.