டிட்லி புயல் தாக்குதலால் ஆந்திரப்பிரதேசத்தில் 2 பேர் உயிரிழப்பு

share on:
Classic

டிட்லி புயல் தாக்குதல் காரணமாக, பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு மத்திய வங்ககடலில் நிலவி இருந்த டிட்லி புயல் இன்று அதிகாலை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்தது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஏராளமான விளைநிலங்களும் சேதடைந்தன. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கம்பளாவளசா, வீரகாட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

புயல் பாதிப்பால் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2 பேர் உயிரிழந்தனர். புயல் பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind