நில ஆக்கிரமிப்பு செய்து மிரட்டிய திமுக முன்னாள் கவுன்சிலர்.

share on:
Classic

திருச்சி அருகேயுள்ள காட்டூரில் நில ஆக்கிரமிப்பு செய்து, திமுக முன்னாள் கவுன்சிலர் மிரட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருச்சி அருகேயுள்ள தெற்கு காட்டூர் பகுதியில் வசித்து வரும் கவிதா, அவரது சகோதரிக்கு தன் வீட்டின் அருகே வீடுகட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே அதேப்பகுதியைச் சேர்ந்த  திமுகவின் முன்னாள் கவுன்சிலர் சிவசக்திகுமார் கவிதா வீட்டின் அருகே சென்று, வீடுகட்ட போடப்பட்டிருந்த தடுப்புகளை பிடிங்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் கவிதா குடும்பத்தினர், திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இதனிடையே  சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு வந்த சிவசக்திகுமார், கவிதா குடும்பத்தினரை கடுமையாக மிரட்டினார். திமுகவின் முன்னாள் கவுன்சிலரின் இந்த அராஜக போக்கால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind