’தாதா ‘ கங்குலிக்கு இன்று பிறந்தநாள்..!

Classic

இந்திய அணியின் பெங்கால் டைகர், தாதா, காட் ஆஃப் ஃபாதர் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மேற்கு வங்க மாநிலம் பெஹலாவில் 1972ஆம் ஆண்டு பிறந்த சவுரவ் கங்குலி, 1990களில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். இந்திய கிரிக்கெட் அணி நெருக்கடியான காலகட்டத்தில் இருந்தபோது கேப்டன் பொறுப்பை ஏற்று, அணியை சிறப்பாக வழிநடத்தினார். 

What a tournament @bcci... just out of the world.. A big thank u to the supporters fans all around the country .. u make it more special

— Sourav Ganguly (@SGanguly99) May 27, 2018

இந்திய அணியில் சச்சின், அசாருதீன், டிராவிட் என பல சீனியர் வீரர்கள் கேப்டனாக இருந்த காலத்தைவிட, கங்குலியின் கேப்டன்ஷிப்பில் ஆக்ரோஷமும், வெற்றிக்கான உத்வேகமும் அதிகமாக இருந்தது. மைதானத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு பேட்டால் பதில் சொல்லியவர். 2003ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தியவர் சவுரவ் கங்குலி. இவரின் தலைமையில் இந்தியா இறுதிப்போட்டி வரை முன்னேறியது. 

ஓய்வுபெற்று 8 ஆண்டுகளாகியும், இந்தியாவில் கிரிக்கெட் மட்டைகள் சுழலும் இடங்களில் எல்லாம் ‘தாதா’ என்ற கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பெங்கால் டைகர், தாதா, காட் ஆஃப் ஃபாதர் என செல்லமாக அழைக்கப்படும் கங்குலிக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

aravindh