பொடுகுத் தொல்லையா ? என்ன செய்தால் சரி ஆகும்..!

share on:
Classic

இன்றைய இளைஞர்களுக்கு பெரும்பாலும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை பொடுகுத் தொல்லை. இதனை போக்க எல்லா வழியும் ட்ரை பணியாச்சு இனி என்ன பண்ணலாம்னு யோசிக்கிறவங்களுக்கு சில டிப்ஸ் !

1. வேப்பிலை: இது போதும். மிகச் சிறந்த நாட்டு மருந்து. வேப்பிலையை அரைத்து ( சார் எடுத்தும் தேய்க்கலாம். அப்படியே தேய்த்தாலும் நலம் ) தலை முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். 

2. பூண்டு: பூண்டு பொடுகிற்கு எதிரி. தேங்காய் எண்ணெயை இளம் சூட்டில் பூண்டு பல் சேர்த்து தலை முடியின் ஸ்கேல்ப் மீது தேய்க்க பொடுகு நாளடைவில் குணமாகும். 

3. தலைமுடியை எப்போதும் மாசு ஏற்படாவண்ணம் சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். 

4. தலைமுடியின் ஸ்கேல்ப் மீது ஏற்படும் அதிக வறட்சியின் காரணமாக பொடுகு ஏற்படும். உடலுக்கு தேவையான தண்ணீர் அதிகம் பகிர வேண்டும். 

5. ஈரத் துண்டோடு தலையை அதிக நேரம் வைத்திருத்தல் கூடாது. குளித்த பின்னர் தலை முடியை உலர வைக்க வேண்டும்.தலை முடிக்கு வெங்காயத்தை பயன்படுத்துவதால் பொடுகு தொல்லை குறையும். வெங்காய சாற்றை முடியின் வேர் மீது படும் படி தேய்க்க வேண்டும்.

6. வெந்தயத்தை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை அரைத்து தலைக்கு தேய்த்து  ஊற வைத்து குளித்தால் பொடுகு பறந்து போகும். 

 7. அவ்வாறு செய்வதால், முடி அடர்த்தி பெறுவதோடு கருமை அடையும், பொடுகு தொல்லையும் இருக்காது. 

8. உணவில் கருவேப்பில்லை சேர்த்துக்கொள்ள முடியின் அடர்த்தி அதிகரித்து பொலிவு பெரும். 

News Counter: 
100
Loading...

sankaravadivu